Mobile TB Testing Vehicle: Perambalur District Revenue Officer started flagging.

பெரம்பலூர்: திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் சார்பில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ள நடமாடும் காசநோய் பரிசோதனை வாகனத்தை சுற்றுப்பயணம் மேற்கொள்ள தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

காசநோய் தொற்று இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற தீவிர முனைப்பில் மத்திய அரசின் தேசிய சுகாதார இயக்கம் நாடு முழுவதும் துரித காசநோய் கண்டறிதல் இயக்கத்தைத்தொடங்கியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு முதலமைச்சர், உலக காசநோய் தினத்தன்று காசநோய் கண்டறிதலுக்கான அதிநவீன வசதிகளுடன் கூடிய நடமாடும் காசநோய் பரிசோதனை வாகனத்தைத் தொடங்கி வைத்தார். அதனடிப்படையில் இந்த வாகனம் ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறது.

சுற்றுப்பயணத்தின் ஒருபகுதியாக பெரம்பலூர் மாவட்டத்தில் காசநோய் கண்டறியும் வகையில் இந்த நடமாடும் பரிசோதனை வாகனத்தை மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.அழகிரிசாமி அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

காசநோய் அறிகுறிகள் இருந்தும் மருத்துவமனையை அணுகாமல் இருக்கும் அனைவரையும் வீடு தேடிச்சென்று அவர்களுக்கு சளி பரிசோதனை செய்து நோய் தாக்கம் உள்ளதா என பரிசோதித்து நோய் உள்ளவர்களுக்கு அரசின் மூலமாக இலவசமாக மருந்துகள் வழங்கப்படும்.

இந்த நடமாடும் வாகனம் இன்று பெரம்பலூர் மாவட்டத்தில் வேலூர், செட்டிக்குளம், அம்மாபாளையம், லாடபுரம், குரும்பலூர், அடைக்கம்பட்டி ஆகிய பகுதிகளுக்கும்,

நாளை 03.7.2018 அன்று துறைமங்கலம், கல்பாடி, பாடாலூர், காரை ஆகிய இடங்களிலும், 04.7.2018 அன்று செங்குணம், எளம்பலூர், கோனேரிப்பாளையம், எசனை, வடக்குமாதவி, அனுக்கூர், கவுல்பாளையம் ஆகிய பகுதிகளிலும்,

05.7.2018 அன்று கிருஷ்ணாபுரம், அரும்பாவூர், பூலாம்பாடி, வேப்பந்தட்டை, நெய்குப்பை, 06.7.2018 அன்று வாலிகண்டபுரம், வி.களத்தூர், பசும்பலூர், கை.களத்தூர், ஆதனூர், வேப்பூர், 07.7.2018 அன்று குன்னம், மேலமாத்தூர், துங்கபுரம், அத்தியூர், முருக்கன்குடி, மருவத்தூர் ஆகிய பகுதிகளுக்கும் சென்று பொதுமக்களிடம் ஆய்வு செய்யப்படவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரகவளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தி.ஸ்ரீதர், சுகாதாரத்துறை இணை இயக்குநர் மருத்துவர் சசிகலா, துணை இயக்குநர் (காசநோய்) மருத்துவர் சுரேஷ், வட்டார மருத்துவ அலுவலர்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மற்றும் மருத்துவர் சிவா, மருத்துவர் அசோக்சாம்ராஜ், மருத்துவர் சீமா, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் புரட்சிதாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!