Municipal Commissioner Kumarimannan requests full cooperation of Perambalur people to eradicate dengue and corona

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களும், நகருக்கு வருகை புரிவோர்களும், கொரோனோ, டெங்கு நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து மேலும், அவர் தெரிவித்தாவது:

கொரோனோ வைரஸ் உலகளாவிய பொதுசுகாதார அவசர நிலையாக அறிவிக்கப்பட்ட நிலையில் உலக சுகாதார நிறுவனம் இதனை தற்போது உலகளாவிய நோய் தொற்றாக அறிவித்துள்ளது. நோய் தடுப்பு நடவடிக்கைக்காக பெரம்பலூர் நகராட்சி சார்பில், பொதுமக்கள் பொது இடங்களில் அதிகளவில் கூடுவதை தவிர்க்குமாறும், அவசர அத்தியாவசியம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியில் வருவதை தவிர்த்திட வேண்டுமெனவும், ஒவ்வொருவரும் கொரோனோ வைரஸ் தொற்றுநோய் மற்றும் டெங்கு பரவாமல் இருப்பதற்காக தங்களது இல்லத்தை தூய்மையாக பராமரிக்கவும், வெளி நபர்கள் வீட்டிற்குள் வருவதை தவிர்த்த்திட வேண்டும் என்றும், தெருவாரியாக நகர்முழுவதும், நகராட்சிக்கு சொந்தமான 10 ஈப்பு வாகனங்களில் ஒலிபெருக்கி அமைத்தும் மற்றும் ஆட்டோ மூலமும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலமாக நேரிலும் நாள்தோரும் பொதுமக்களுக்கு விளம்பரம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், பொதுமக்கள் அவசர அத்தியாவசியம் இல்லாமல் வீட்டைவிட்டு வெளியில் வருவதை தவிர்த்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவை ஏற்படின் நகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை அலைபேசியில் தொடர்பு கொண்டு தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள விளம்பர பேனர்கள் மூலம் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூர் நகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் கொரோனோ வைரஸ் நோய் தடுப்பு கிருமிநாசினி ஜெட்ராடிங்க் வாகனம், தீயனைப்பு வாகனம், மினிடிராக்டர் வாகன ஸ்பிரேயர் மற்றும் கைத்தெளிப்பான் மூலமாகவும் தொடர்ந்து தெளிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் வந்துசெல்லும் முக்கிய இடங்கள் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம், அம்மா உணவகங்கள் உழவர் சந்தை மற்றும் காய்கறி மார்க்கெட் ஆகிய இடங்களில் நாள்தோறும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு வருகிறது.

மாவட்ட ஆட்சியரகம், ,நீதிமன்ற வளாகம், அரசு பொதுமருத்துவமனை, ஆகிய இடங்களுக்கு வரும் அலுவலர்கள் பணியாளர்கள் பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் உதவியார்கள் ஆகியோர்களுக்கு வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கையாக கைகழுவுவதற்கு ஏதுவாக கிருமிநாசினிகள் மற்றும் கைகழுவும் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.

நகராட்சி எல்லைக்குட்ப்பட்ட பகுதியில் உள்ள அனைத்து சாலைகள், குறுகிய சந்து மற்றும் தெருக்களில் பெரிய மற்றும் சிறிய வாகனங்கள் மூலம் வீடுகளுக்கு கைபம்பு மூலமாகவும் தினசரி கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.

கொரோனோ வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக தற்போது லைசால் மற்றும் சோடியம் ஹைபோ குளோரைடு கரைசல் கிருமிநாசினிகள் தேவையான அளவிற்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.


நகராட்சியில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பொது சுகாதாரப் பணியாளர்கள் அனைவருக்கும் முககவசம் மற்றும் கை உறைகள் வழங்கப்பட்டுள்ளன. இதனை அனைவரும் பயன்படுத்துவதையும் கண்காணிக்கப்படுகிறது. மேலும், முககவசம் இல்லாமல் நகரில் வரும் பொதுமக்களுக்கும் நகராட்சியினால் முககவசம் வழங்கப்படுகிறது. அதோடு, அரசு உத்தரவுப்படி அபராதமும் விதிக்கப்படுகிறது.

பொதுசுகாதார துறையின் ஆலோசனைகள் பெற்று அவ்வப்போது பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் தீயணைப்பு துறை உதவியுடன் கிருமிநாசினிகள் அடிக்கப்பட்டு வருகிறது.

மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் துணை இயக்குநர், பொது சுகாதாரத் துறை அலுவலர்களால் வழங்கப்படும் பட்டியலின்படி வெளிநாடு வெளிமாநிலங்களிலிருந்து வந்துள்ள நபர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க குழு அமைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தனிமை படுத்தப்பட்ட நபர்கள் உள்ள வீடுகளுக்கு நாள்தோறும் கிருமி நாசினி தெளித்து பொதுசுகாதார பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.


அரசு ஆணை மற்றும் அறிவுரைகளின்படி இந்நகரில் கொரோனோ வைரஸ், டெங்கு தடுப்பு நடவடிக்கை முழுமையாகவும் விடுபடாமலும் நகராட்சியால் செய்யப்பட்டுவருகிறது. டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணிக்கு வார்டுக்கு 2 பணியாளர்கள் வீதம் 42 பணியாளர்களை கொண்டு வீடுவீடாக சென்று சேமிக்கப்படும் குடிநீரில் மற்றும் இதர பயன்பாட்டிற்கான நீரில் கொசுப்புழு உள்ளனவா என்பதை கண்டறிந்து உடனுக்குடன் அழிக்கப்படுகிறது.

தினசரி அனைத்து வார்டுகளின் முதிர்கொசுவினை ஒழிப்பதற்கு டெக்னிக்கல் மாலத்தியான் கலந்து கொசுமருந்து அடிக்கப்படுகிறது. கொசுப்புழுக்களை (லார்வா) ஒழிப்பதற்கு டெமிபாஸ் மற்றும் அபேட் மருந்து தெளிக்கப்படுகிறது.

அனைத்து வார்டுகளிலும் குடியிருப்பு வீடுகள், வணிக வளாகங்கள், மற்றும் கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களில் பயன்படுத்தப்படும், குடிநீர் தொட்டிகள், உடைந்த பாத்திரங்கள், டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் சிரட்டைகள், ஆகியவற்றில் மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கியுள்ளதை அப்புறப்படுத்தப்பட்டு கொசுப்புழு உற்பத்தியாகமால் கட்டுப்படுத்தப்படுகிறது, மழைக்காலம் வருவதால், பொதுமக்கள் கொரானாவை தடுக்க முக்கவசம் அணிவது, கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள கிருமி நாசினி பயன்படுத்துதல், சோப்பை கொண்டு கைகளை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்வதோடு, மற்ற நபர்களிடையே சமூக இடைவெளி போதுமான அளவு கடைபிடிக்க வேண்டும்.

பொதுமக்கள் வாட்ஸ் தெரிவிக்கும் குறைகளை உடனுக்குடன் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும்

டெங்கு கொசு உற்பத்தியாகமல் தடுக்க வீட்டின் சுற்றுப் புறத்தை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும், உபயோகிக்காத பொருட்களல் தண்ணீர் தேங்கி நிற்காமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்த அவர், பெரம்பலூர் நகராட்சி பகுதிகளில் குடியிருக்கும் மக்களும், பல்வேறு அலுவல்களுக்கு பெரம்பலூர் நகருக்கு வந்து அனைத்து தரப்பினரும், கொரோனா மற்றும் டெங்கு இல்லாத நகராக இருக்க முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!