My removal from the post of Perambalur District Secretary is unacceptable: R.T. Ramachandran interview

File Copy
பெரம்பலூர் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து என்னை நீக்கியது ஏற்க முடியாது, என ஆர்.டி. ராமச்சந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும், அவர் கூறுகையில்,
ஓபிஎஸ் அணியை சேர்ந்த நாங்கள் இரட்டை தலைமை வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்
நிரந்த பொது செயலாளர் அம்மா மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்கியும், இரட்டை தலைமைக்கு எதிராக சில முடிவுகளையும் அறிவித்துள்ளார்.
அந்த முடிவுகளும், அறிவிப்புகளும் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படியும், சட்டப்படியும் செல்லாத நிலையில், என்னை கட்சியின் அடிப்படை உறுப்பினர், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கியது எப்படி செல்லுபடியாகும், அதனை ஒருபோதும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என தெரிவித்துள்ளார்.