Mysterious death woman, 2 arrested near in PERAMBALUR

பெரம்பலூர் மாவட்டம், நாரணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் முருகையன் (35) இவருக்கும் எழுமூரை சேர்ந்த சுப்ரமணி மகள் சுதா இருவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து. இவர்களுக்கு ஜகன்(5) நிகிதா(3) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதில் முருகையன் 3மாதங்களுக்கு முன்னர் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று விட்டார்.

இந்நிலையில் நேற்று காலை 11மணியளவில் சுதா வீட்டில் தனியாக இருந்துள்ளார். சுதாவின் மாமியார் வயல்வேலைக்கு சென்றுவிட்டு வீட்டில் வந்து பார்த்தபோது சுதா இறந்து தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். அப்பகுதியில் வசிப்பபவர்கள் பாடாலூர் காவல் நிலையத்திற்கு கொடுத்த தகவல் கொடுத்துள்ளனர்.

விரைந்து வந்த போலீசார் சுதாவின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த தகவல் அறிந்த சுதாவின் கணவர் முருகையன் வெளிநாட்டில் இருந்த அவார் நேற்றிரவு நாரணமங்கலம் கிராமத்திற்கு வந்தார். இந்நிலையில் சுதாவின் தந்தை மற்றும் உறவினர்கள் சுதாவின் சாவில் மர்மம் உள்ளதாகக்கூறிய பாடாலூர் காவல் நிலையத்தில் புகார கொடுத்தனர். பின்னர், நடைபெற்ற விசாரணையில் நாரணமங்கலத்தை சேர்ந்த மருதைராஜ், விஜயன் ஆகிய இருவரை கைது செய்து வழக்கு பதிந்துள்ளனர்.. மேலும் சுப்ரமணியன் எனபவரை தேடி வருகின்றனர்.

இன்று காலை சுதாவின் சாவிற்கு காரணமாணவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துமணை முன்பு போராட்டம் நடத்தினர்.

போலீசார் நடத்திய விசாரணையில் சுதாவின் வீட்டிற்கு அருகிலிருக்கும் மருதைராஜ் விஜயன் ஆகி இருவரும் சுதாவின் வீட்டிற்கு திங்கள்கிழமை சென்றதாகவும் அதுவே சுதாவின் இறப்பிற்கு காரணமாக அமைந்துள்ளதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மூவர் மீதும் 302 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிய வலியுறுத்தியதால் அரசு மருத்துவமணை முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

பிரிவு 306-ல் கொலைக்கு துண்டியது, 376 பிரிவு கூட்டு கற்பழிப்பு ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ளதாகவும் உடற்கூறாய்வு அறிக்கை முடிவின் கீழ் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தபின் சுதாவின் உடலை வாங்க சம்மதித்தனர். முன்னதாக துறையூர் பெரம்பலூர் சாலையில், சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாடாலூர் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து ஆகியோர் பொது மக்களிடம் பேச்சு நடத்தியதால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!