Nallaciriyar award-winning teachers who share the excitement of meeting the perambalur district civil servants.
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த நல்லாசிரியர் விருதுப்பெற்ற ஆசிரியப் பெருமக்கள் இன்று (06.09.16) மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாவட்ட ஆட்சிப் பணியாளர் க.நந்நதகுமாரை சந்தித்து, தாங்கள் பெற்ற நல்லாசிரியர் விருதுகளை காண்பித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
மாணவர்களுக்கு கல்வியோடு ஒழுக்கம், பன்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, பொது அறிவு ஆகியவற்றை போதிக்கும் ஆசிரியப் பெருமக்களின் பணியினை பாராட்டி ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவித்து வருகிறது.
மேலும் நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக தற்போது வழங்கபட்டு வரும் 5 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு 10 ஆயிரமாக ரூபாயாக உயர்த்தி வழங்கிட மாநில உத்தரவிட்டுள்ளது.
அதன்படி அந்தூர் ஊராட்சி ஒன்றிய நடுப்பள்ளி தலைமை ஆசிரியர் அ.சந்திரன், காருகுடி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் சவுந்திரபாண்டியன், செட்டிக்குளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் லதா, வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பி.சுகுமாரன், இலப்பைக்குடிகாடு மகளிர் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.தமிழ்ச்செல்வி உள்ளிட்ட 5 ஆசிரியர்களுக்கு சென்னையில் நடைபெற்ற விழாவில் பள்ளி கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சரால் வழங்கப்பட்டது.
நல்லாசிரியர் விருதுப்பெற்ற ஆசிரியர்கள் இன்று (06.09.16) மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாவட்ட ஆட்சிப் பணியாளர் க.நந்நதகுமாரை சந்தித்து, தாங்கள் பெற்ற நல்லாசிரியர் விருதுகளை காண்பித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
அப்போது முதன்மை கல்வி அலுவலர் க.முனுசாமி, மாவட்ட தொடக்கல்வி அலுவலர் எலிசபெத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.