Namakkal collector pirayli to watch today presented visually disabled
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் இன்று பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பிரய்லி கைகடிகாரம் வழங்கினார்.
நாமக்கல்: மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மூலம் கல்வி பயிலும் ,பணிக்குச் செல்லும், சுய தொழில் செய்யும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு தொட்டுப்பார்த்து நேரம் அறிந்து கொள்ளும் விலையில்லா சிறப்பு பிரய்லி கைகடிகாரம் வழங்கும் திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.40,500/- மதிப்பில் 27 பிரய்லி கைகடிகாரங்களை மாவட்ட ஆட்சியர் ஆசியாமரியம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்
சுப்பிரமணி உள்ளிட்ட பிற அலுவலர்களும் கலந்து கொண்டனர்.