Namakkal Congress Party’s Indira Gandhi Memorial Day
நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மறைந்த பிரதமர் இந்திராகாந்தி நினைவு நாள் மற்றும் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாள் விழா நடைபெற்றது.
நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் மறைந்த பாரதப் பிரதமர் இந்திராகாந்தியின் நினைவு நாள் விழா மற்றும் மறைந்த துணைப் பிரதமர் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நாமக்கல் மணிக்கூண்டு அருகில் நடைபெற்றது.
மாவட்ட காங்கிரஸ் தலைவர் சேக் நவீத் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து தலைவர்களின் உருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். நகரத்தலைவர் ராம்குமார், துணைத்தலைவர் குமார், செயலாளர் தாமு, கொல்லிமலை வட்டாரத் தலைவர் குப்புசாமி, மாவட்ட மகளிரணி துணைத்தலைவர் பரிமளா, முன்னாள் மாவட்ட தலைவர் சுப்பிரமணியம், மாவட்ட பொருளாளர் கமல்நாத், ஊடகப்பிரிவு பொறுப்பளர் தினேஷ்குமார், சிவாஜி மன்றம் சந்திரசேகரன் உள்ளிட்ட திரளானவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.