Namakkal district, DMK pro support teams are receiving applications for posts
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பு அணிகளின் பொறுப்பாளர்கள் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் காந்திசெல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
நாமக்கல்கிழக்குமாவட்டத்திற்கு உட்பட்டமாவட்ட, நகர, ஒன்றியம், பேரூராட்சி அளவிலான சார்பு அளிகளுக்கு அமைப்பாளர்கள், துணை அளைப்பாளர்கள் பொறுப்புகளுக்கு பணியாற்றிட விருப்பமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சார்பு அணிகளின் விபரங்கள்: மாணவர்அணி, இலக்கியஅணி, மகளிர் அணி, மகளிர் தொண்டரணி, விவசாய அணி, விவசாய தொழிலாளர் அணி, நெசவாளர் அணி, ஆதி திராவிட நலக்குழு, தொண்டர்அணி, வழக்கறிஞர்அணி, சிறுபான்மையினர் நலஉரிமைப்பிரிவு, கலைஇலக்கிய பகுத்தறிவு பேரவை, இன்ஜினியர் அணி, டாக்டர் அணி, வர்த்தகர் அணி, மீனவர் அணி ஆகியவை உள்ளன.
இவற்றில் பணியாற்றிட விரும்புவோர் தான் சார்ந்த ஒன்றிய, நகராட்சி, பேரூராட்சி செயலாளர்களிடமோ அல்லது மாவட்ட அலுவலகத்திலோ வரும் 12 தேதி வெள்ளிக்கிழமைக்குள் நேரில் வந்து தங்களது விருப்ப விண்ணப்பத்தைகொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.