Namakkal East District DMK decided to send goods at a cost of Rs 10 lakh for the impact of the Gaja storm
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு முதல் கட்டமாக ரூ.10 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் வழங்குவதென்று மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் உடையர் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளரும் முன்னள் மத்திய இணை அமைச்சருமான காந்திசெல்வன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.
கூட்டத்தில், கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்ட பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் முதற்கட்டமாக ரூ.10 லட்சம் மதிப்புள்ள நிவாரணப்பொருட்களை அனுப்பி வைப்பதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாமக்கல் பார்லி தொகுதிக்குட்பட்ட நாமக்கல்,சேந்தமங்கலம் மற்றும் ராசிபுரம் ஆகிய 3 சட்டசபைத் தொகுதிகளில் ஒன்றிய, நகர, பேரூராட்சிகள் மற்றும் சார்பு அணிகள் சார்பில் தொடர் கூட்டங்களை நடத்தி தேர்தல் பணிகளை துவக்கி பார்லி தொகுதியை திமுக கோட்டையாக மாற்றுவதுதென்று மாற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏக்கள் சரசுவதி, ராமசுவாமி, பொன்னுசாமி, மாநில மகளிரணி இணை அமைப்பாளர் ராணி, சட்டதிருத்தக்குழு உறுப்பினர் நக்கீரன், மாவட்ட துணைச் செயலாளர் விமலாசிவக்குமார், பொருளாளர் செல்வம், நகர செயலாளர்கள் ராசிபுரம் சங்கர், நாமக்கல் ராணா ஆனந்த், ஒன்றிய செயலாளர்கள் கவுதம், துரைராமசாமி, ஜெகநாதன், துரைசாமி, பழனிவேல், பாலு , பாலசுந்தரம், முத்துசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.