Namakkal – in Erumapatty, Gandhi’s Birthday Festival, the festival of St. Francis of Assisi
நாமக்கல் அருகே உள்ள எருமப்பட்டி புனித சவேரியார் கிராம சுகாதார மையம் மற்றும் சவேரியார் குழந்தைகள் இல்லம் சார்பில் அமைதி திருவிழா நடைபெற்றது.
இதில் காந்தியடிகள் பிறந்தநாள் விழா, புனித பிரான்சிஸ் அசிசியின் திருவிழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு சேலம் மறை மாவட்டம் ஆயர் சிங்கராயன் தலைமை வகித்தார். குழந்தைகள் இல்ல நிர்வாகி அந்தோணி மேரி முன்னிலை வகித்தார். அல்போன்ஸ் வரவேற்றார்.
விழாவில் கூலிப்பட்டி ராமகிருஷ்ணா ஆசிரமம் பூர்ண சேவானந்தா, ஏற்காடு திவாகர், புதுப்பட்டி அல்போன்ஸ், ஈரோடு வேதநாயகம், அங்கப்பன், ரீமன் இன்ஜினியரிங் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர்.
விழாவில் சிறப்பாக சமூக சேவையில் ஈடுபட்டவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கும் அமைதி விருது வழங்கப்பட்டது. விழாவில் இல்ல குழந்தைகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. முடிவில் லல்லி ஸ்டெல்லா நன்றி கூறினார்.