Namakkal son to hospital, the mother with a snake bite
நாமக்கல்: மகனை கடித்த பாம்பை அடித்து பையில் போட்டு எடுத்துக்கொண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பெண் வந்த சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே கொடுக்கால்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயராகவன். இவரது மனைவி ராணி. இவர்களின் மகன் தர்ஷன் (வயது 6). தர்ஷன் இன்று காலை வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரை பாம்பு கடித்துவிட்டது.
இதனைக் கவனித்த தாய் ராணி, உடனடியாக அந்த பாம்பை அடித்துக்கொன்று, அதை பையில் போட்டு எடுத்துக்கொண்டு, மகனை அழைத்துக்கொண்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அங்கு மருத்துவர்களிடம் தான் கொண்டு வந்த பாம்பை காட்டி இந்த பாம்பு தன் மகனை கடித்துவிட்டதாக கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து தர்ஷன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மகனை கடித்த பாம்பைக்கொன்று பையில் போட்டு எடுத்துக்கொண்டு பெண் ஆஸ்பத்திரிக்கு வந்த சம்பவம் நாமக்கலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.