Namakkal – Trichy Road Railway Road Railway Over Bridge on Setup electric lighting; Resolution on BJP meeting
நாமக்கல்- திருச்சி ரோட்டில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் மின்விளக்கு அமைக்க வேண்டும் என பாஜக நகர செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாமக்கல்லில் பாஜக நகர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர தலைவர் வரதராஜ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட பொது செயலாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தனர். இதில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் மனோகரன், மாநில செயற்குழு உறுப்பினர் தமிழரசி யோகம் ஆகியோர் பங்கேற்று பேசினர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
நாமக்கல் பஸ்ஸ்டாண்டில் இருந்து திருச்சி மெயின் ரோட்டில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் மின் விளக்கு வசதியை நகராட்சியினர் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். சேந்தமங்கலம் போகும் பகுதியில் உள்ள கொசவம்பட்டி குளத்தை தூர்வாரி சுகாதார சீர்கேட்டை தடுத்து கழிவு நீரை வடிகால் மூலம் வெளியேற்றி மழைநீர் சேமிப்பதற்கு ஏதுவாக குளத்தை பராமரிக் வேண்டும்.
ரேஷன் கடைகளில் மளிகை பொருட்களை ஸ்டாக் வைத்து பொதுமக்களுக்கு சரிவர விநியோகம் செய்ய வேண்டும். ஹை-கோர்ட் உத்தரவின்படி டாஸ்மாக் கடைகளை நகராட்சி பகுதிகளில் அகற்றவேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாவட்ட துணைத்தலைவர் சம்பத்குமார், நகர பொது செயலாளர் செந்தில்குமார் உள்ளிட கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.