Nan Muthalvan Thittam; Collector participates in Perambalur Government High School!

தமிழ்நாடு முதலமைச்சரால் 01.03.2022 அன்று தொடங்கி வைக்கப்பட்ட திட்டம், நான் முதல்வன் திட்டம். அரசுப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்து வழிகாட்டும் வகையில் ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கலந்து கலெக்டர் வெங்கடபிரியா மாணவர்களுடன் கலந்துரையாடி பேசியதாவது:

நாங்கள் படிக்கும் காலத்தில் இதுபோன்ற வகுப்புகளில் பங்கெடுக்கும் வாய்ப்புகள் எங்களுக்கு கிடைக்கவில்லை. மேல்நிலைக் கல்வி படிக்கும்போதே அடுத்து உயர் கல்விக்கு என்னென்ன படிக்கலாம், என்ன படிப்பு படித்தால் என்ன வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற தெளிவை நீங்கள் பெறுவதற்கு இந்த திட்டம் பெரிதும் பயனுள்ளதாத இருக்கும்.

உங்களின் பள்ளிப்பருவத்தில் கிடைத்த அற்புதமான திட்டம் நான் முதல்வன் திட்டம். வாழ்க்கையில் தொழில்முனைவோராக, கல்வியாளராக வெற்றி பெற்றவர்கள் கடந்து வந்த பாதைகள் அவர்கள் சந்தித்த சோதனைகள் சாதித்த சாதனைகள் என அனைத்தையும் உங்களுடன் காணொலி வாயிலாக பகிர்ந்துகொள்வதன் மூலம் உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்.

பெரம்பலுார் மாவட்டத்தில் 19.04.2022 முதல் இன்று வரை இந்த சிறப்பு நிகழ்வு நடத்தப்படுகின்றது. இதில் பெரம்பலுார் மாவட்டத்தில் உள்ள 45 அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 4,053 மாணவ மாணவிகள் பயன்பெறுகின்றனர். இந்த பொன்னான திட்டத்தை பயன்படுத்தி வாழ்வில் வெற்றிபெற உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என பேசினார்.

இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், மாவட்ட கல்வி அலுவலர் சண்முகம், பெரம்பலுார் வட்டாட்சியர் கிருஷ்ணராஜ், பள்ளி தலைமையாசிரியர் ஜெய்சங்கர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!