National level tennis tournament: Collector’s appreciation to the bronze-winning Perambalur student

இந்திய பள்ளிகள் குழுமம் நடத்திய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கம் வென்ற பெரம்பலூர் மாவட்ட மாணவ, மாணவிகள் மாவட்ட ஆட்சித்தலைவா; திருமதி.வே.சாந்தா,இ.ஆ.ப. அவா;களை இன்று (24.01.2018) மாவட்ட ஆட்சியரகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இந்திய பள்ளிகளின் விளையாட்டுக் குழுமம் நடத்தும் மண்டல அளவிலான தெரிவு போட்டிகள் 02.09.2017 அன்று கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இப்போட்டிகளில் கரூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். இப்போட்டிகளில் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மாணவர் எஸ்.சூரியா பங்குபெற்று தேர்வு பெற்றார்.

மேலும் மாநில அளவிலான தெரிவு போட்டிகள் சென்னையில் 25.09.2017ல் நடைபெற்றது. இப்போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு மாவட்டங்களில் இருந்து 40 மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் எஸ்.சூரியா தமிழக அணிக்காக தேர்வ பெற்றார்.

மேலும், இந்திய பள்ளிகள் குழுமம் நடத்திய 17 வயதிற்குட்பட்ட அகில இந்திய அளவிலான டென்னிஸ் போட்டி தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடந்தது.

அப்போட்டியில், பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவன் எஸ்.சூரியா கலந்துகொண்டு, வெண்கலப் பதக்கம் வென்று அகில இந்தியா அளவில் சாதனை நிகழ்த்தினார்.

மேற்படி, வெற்றி பெற்ற மாணவர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தாவை சந்தித்து பதக்கங்களை காண்பித்து, வாழ்த்து பெற்றார். அப்போது, பேசிய மாவட்ட ஆட்சியர் விளையாட்டுத்துறையில் மென்மேலும், பல்வேறு சாதனைகளைப் படைத்து நமது நாட்டிற்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தி.அருள்மொழிதேவி, உடற்கல்வி ஆய்வாளர் விஜயன் மற்றும் சூரியாவின் தந்தை ந.செல்லப்பிள்ளை, உடற்கல்வி ஆசிரியர் பிரேம்நாத் ஆகியோர் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!