National level tennis tournament: Perambalur student Bronze medal winning record
அகில இந்திய அளவிலான டென்னிஸ் போட்டியில் பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் பள்ளி மாணவன் வெங்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இந்திய பள்ளி குழுமம் சார்பில் அகில இந்திய அளவிலான டென்னிஸ் போட்டி தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் அண்மையில் நடைபெற்றது.
இதில் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளியை சேர்ந்த 9 ம் வகுப்பு மாணவன் செ.சூரியா ( ஊட்டி காபி பார் செல்லப்பிள்ளை மகன்) போட்டியில் கலந்து கொண்டார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்ட செ.சூரியா வெங்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
மாணவன் சூரியாவை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விஜயன், அப்பள்ளியின் தாளாளர் ஆர்.ரவிச்சந்திரன், செயலாளர் அங்கையர்கன்னி ரவிச்சந்திரன், பள்ளியின் முதல்வர்கள் சு.சேகர், பி.ஆர். மனோஜ், ஆகியோர் இனிப்பு வழங்கி பாராட்டி வாழ்த்தினர்.
மேலும், டென்னிஸ் பயிற்சியாளர் பாப்சிகரன், உடற்கல்வி இயக்குநர் ஆர்.பிரேம்நாத், மற்றும் உடற்கல்வி ஆசிரியர் எஸ். அகிலாதேவி, இருபால் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தார்கள்.
வெற்றி பெற்ற மாணவன் சூரியா பல்வேறு இடங்களில் நடந்த டென்னிஸ் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.