National Voter Day Awareness Campaign: near Perambalur
பெரம்பலூர் : ஆண்டுதோறும் ஜனவரி 25 ஆம் நாள் தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்படுகின்றது. அதனடிப்படையில் தேர்தல் வாக்காளர் தினத்தை முன்னிட்டு தேர்தல் நடைமுறைகள் குறித்தும், 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் தேர்தலில் பங்கேற்பது குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவர்கள் பங்குபெற்ற விழிப்புணர்வு பேரணியை இன்று, ஆலத்தூர் வட்டம் மேலமாத்தூர் கிராமத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.அழகிரிசாமி கொடியசைத்து தொட1;கி வைத்தார்.
இப்பேரணியில் மேலமாத்தூர் வரதராஜன் பாலிடெக்னிக் மாணவர்கள் பலர் கலந்துகொண்டு வாக்காளர் தினம் குறித்தும், 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் தேர்தலில் பங்கேற்பது குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான பதாகைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் சென்றனர்.
மேலமாத்தூர் பெருமாள் கோவில் அருகே தொடங்கிய இப்பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று மேலமாத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே முடிவுற்றது.
இந்நிகழ்ச்சியில் ஆலத்தூர் வருவாய் வட்டாட்சியர் ந.சீனிவாசன், தேர்தல் துணை வட்டாட்சியர் க.சுதாகர், வரதராஜன் பாலிடெக்னிக் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் சக்திவேல், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.