Natural agricultural scientist Nammazlvar the third anniversary concert பெரம்பலூரில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

பெரம்பலூரில் இயற்கை விவசாயத்தில் ஆர்வமுடையவர்கள் இணைந்து நடத்தும் தமிழ்க்காடு அமைப்பின் சார்பில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்டத்தில் இயற்கை முறை வேளாண்மையில் ஈடுபட்டு வரும் அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, இயற்கை வேளாண்மை பற்றியும், அதன் முக்கியத்துவம் குறித்தும், இயற்கை வேளாண்மையில் நம்மாழ்வாரின் பங்களிப்பு குறித்தும் பேசினர்.

இதில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள், இயற்கை முறை விதைகள், புத்தகங்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டது.

முன்னதாக இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் உருவப்படத்திற்கு தீபம் ஏற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதோடு, கலந்து கொண்டவர்கள் அனைவரும் மௌன அஞ்சலியும் செலுத்தினர். இறுதியாக இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட வரகு, தினை,சாமையில் செய்யப்பட்ட உணவு பண்டங்கள் வழங்கப்பட்டது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!