near perambalur excavated near the well when the stone fell victim to the worker! 3 people were injured
பெரம்பலூர் அருகேஅடிக்கிணற்றை ஆழப்படுத்தும் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் கூலித் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மூன்று தொழிலாளிகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெரம்பலூர் அருகே உள்ள காரை கிராமத்தில், சமத்துவபுரம் அருகே துரைசாமி என்பவருக்கு சொந்தமான வயலில் உள்ள கிணற்றை ஆழப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
அதே பகுதியிலுள்ள நாரணமங்களம் கிராமத்தை சேர்ந்த வடிவேல், செல்வராஜ், நல்லுசாமி, கலியன் ஆகிய நான்கு பேரும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கிணற்றில் தோண்டப்பட்ட கற்கள் மேலே கொண்டு செல்லப்பட்டன, எதிர்பாரத விதமாக கிணற்றுக்குள் கற்கள் மீண்டும் விழுந்தது. இதில் படுகாயமடைந்த வடிவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிந்தார். மேலும் செல்வராஜ், நல்லுசாமி, கலியன் ஆகிய மூவரும் படுகாயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து பாடாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.