NEET Exam, the State requesting the exemption, all the opposition Parties demonstration in perambalur

பெரம்பலூர் : நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரும் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் கோரி பல்வேறு கட்சியினர் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திராவிடர் கழக மாவட்ட தலைவர் சி.தங்கராசு தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பெ.அண்ணாதுரை முன்னிலை வகித்தார். மருத்துவர்கள் சி.கருணாகரன், எஸ்.வல்லபன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

மருத்துவம் மற்றும் பல் மருத்துவகல்லூரிகளுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தியும் விலக்கு கோரும் மசோதாவிற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல அளிக்க வேண்டும், தேசிய மருத்துவ ஆணையம் உருவாக்குவதை கைவிட வேண்டும், தமிழக மருத்துவ கல்லூரிகளில் 100 சதவீதம் இடங்களையும் தமிழக மாணவர்களுக்கே வழங்க வேண்டும், அரசு மருத்துவர்களுக்கு உயர் மருத்துவ கல்வியில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில் பெரம்பலூர் திமுக நகர செயலாளர் ம.பிரபாகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம், வி.சி.க செய்தி தொடர்பாளர் அசூர் உதயகுமார், மற்றும் திமுக, கம்யூனிஸ்ட், உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

திக மாவட்ட அமைப்பாளர் துரைசாமி நன்றி கூறினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!