New penalties for motorists who violate traffic rules; Perambalur Traffic Police Distributing Awareness Pamphlets!

பெரம்பலூர் நகர போக்குவரத்து காவல் சார்பில், இன்று காலை, மோட்டர் வாகன சட்ட திருத்தப்படி, வாகன ஓட்டிகள் விதி மீறுலுக்கான புதிய அபராதம் குறித்து, டிராபிக் இன்ஸ்பெக்டர் சுப்பையா, சப்-இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணியன், குருநாதன், ஆரோக்கியசாமி ஆகியோர் காமராஜர் வளைவு சிக்னல் பகுதியில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அபராத விவரங்கள் (ரூபாயில்) : பொது விதிமுறை மீறல் பழைய அபராதம் (ப) 100, புதிய அபராதம் 500, 2வது முறை 1500, சாலை ஒழுங்கு மீறல் (ப)100, பு – 500, 2வது முறை 1500, பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பது 200 லிருந்து 500, அதிவேகத்திற்கு 400லிருந்து, 1000, ஆபத்தான வகையில் ஓட்டுதலுக்கு 1000, 2வது முறைக்கு 10 ஆயிரம், ரேஸ் ஈடுபட்டால் 500 லிருந்து 5000, 2வது முறைக்கு 10 ஆயிரம், தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுதலுக்கு 100 லிருந்து, 1000,

ஆம்புலன்ஸ் மற்றும் அவசர சேவை வாகனங்களுக்கு வழி விடாமல் இருத்தல் 10 ஆயிரம், காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டுதல் 1000 லிருந்து 2000, 2வது முறைக்கு 4000 ஆயிரம், தடை செய்யப்பட்ட பகுதியில் அதிக சத்தம் எழுப்பக்கூடிய ஒலிப்பான்களை பயன்படுத்துதல்1000, 2வது முறைக்கு 2ஆயிரம், இருசக்கர வாகனத்தில் இருவருக்கும் மேல் பயணித்தால் 100 லிருந்து 1,000, கார்களில் சீட்டு பெல்ட் அணியாமல் பயணித்தால் 100 லிருந்து 1000, குழந்தைகளுக்கு தேவையான சீட்டு பெல்ட் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் இருத்தல் 1000,

பதிவு இல்லாமல் வாகனம் ஓட்டுதல் 2,500 லிருந்து 5,000, சரக்கு வாகனங்களில் உத்தரவுக்கு பின்னரும் எடையை குறைக்காமல் இருந்தால் 40,000,
நிர்ணயிக்கப்பட்ட பயணிகளை விட அதிகமான நபர்களை ஏற்றினால், தலா ஒரு பயணிக்கு 200, காற்று, ஒலி மாசு ஏற்படுத்தும் வகையில் இயக்கினால்
10,000, வாகனங்களில் தேவையற்ற மாற்றங்கள் செய்தல் 5,000, வாகனத்தை புதுப்பிக்க தவறுதல் 500 லிருந்து 1,500, வாகனங்களில் படிக்கட்டில் பயணித்தால் 500 லிருந்து 1,500, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் 5000 என வாகன ஓட்டிகளிடம் எடுத்துரைத்தனர். மேலும், வாகன ஓட்டிகள் உரிய விதிமுறைகளை பின்பற்றி ஒத்துழைப்பு வழங்கி அபராதத்தில் காத்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இதே போல், பாலக்கரை, புது பஸ் ஸ்டாண்ட், ரோவர் ஆர்ச், கடைவீதி, பழைய பஸ் ஸ்டாணட், மார்க்கட் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தொடர்ந்து துண்டு பிரசுரம் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!