New Pulsal Bike launch event by lingam Bajaj Showroom in Perambalur!
பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள லிங்கம் பஜாஜ் பைக் விற்பனை ஷோரூம், சார்பில் பஜாஜ் பல்சர் பி 150 என்ற புதிய மோட்டார் சைக்கிளின் அறிமுக விழா தனலட்சுமி ஹோட்டலில் நடைபெற்றது. விழாவிற்கு பெரம்பலூர் லிங்கம் பஜாஜ் உரி மையாளர் வரதராஜன் தலைமை வகித்தார். ஷோரூம் விற்பனை மேலாளர் ஷீலா வரவேற்றார். இதில் பெரம்பலூர் மாவட்ட இரு சக்கர வாகனம் பழுது நீக்குவோர் சங்கத்தின் தலைவர் கே.சண்முகம், துணைத் தலைவர் டி.விஸ்வநாதன் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விழாவில் லிங்கம் பஜாஜ் ஷோரூமின் சர்வீஸ் மேலாளர் மணிகண்டன் பஜாஜ் பல்சர் பி 150 என்ற புதிய மோட்டார் சைக்கிள் குறித்து பேசினார். ஷோரூம் மேலாளர் ஜோதிராஜ் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற் பாடுகளை லிங்கம் பஜாஜ் ஷோரூம் பணியாளர்கள் செய்திருந்தனர்.