New route bus to Elambalur Chipkot factory; Minister Sivasankar started waving the flag in Perambalur.

கொடி நாளை முன்னிட்டு, இன்று பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில், குன்னம் தொகுதி எம்.எல்.ஏவும், பிற்பட்டோர் நலத்துறை அமைச்சருமான சிவசங்கர் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து, எளம்பலூரில் உள்ள சிப்காட் தொழிற்சாலைக்கு, பணியாளர்கள், தொழில் முனைவோர், வணிகர்கள் சென்று வரும் வகையில் புதிய வழித்தடத்தில், நகரப் பேருந்து ஒன்றை தொடங்கி வைத்தார். இந்த பேருந்து காலை 9 மணிக்கு பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் புறப்பட்டு, எளம்பலூர் வழியாக மீண்டும் அதே வழித்தடத்தில் பெரம்பலூர் வந்தடையும். இதே போல் மாலை 5.15 மணிக்கு சிப்காட்டில் புறப்பட்டு, பெரம்பலூர் வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா, மாவட்ட ஊராட்சி சேர்மன் குன்னம். சி. ராஜேந்திரன், பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன், டி.சப்-கலெக்டர் நிறைமதி, ஒன்றிய சேர்மன்கள் கிருஷ்ணமூர்த்தி, பிரபாசெல்லப்பிள்ளை, மீனாஅண்ணாதுரை, ராமலிங்கம், மற்றும் ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, நல்லத்தம்பி, மதியழகன், மாவட்ட மகளிரணி மகாதேவிஜெயபால், எளம்பலூர் ஊராட்சித் தலைவர் சித்ராதேவிகுமார், பெரம்பலூர் ஒன்றிய இளைஞரணி ராஜேஷ் மற்றும் சிப்காட் தொழிற்முனைவோர்கள், அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள், வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கட்சி பிரமுகர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

முன்னதாக, மாற்றுத் திறனாளிகள் 72 பேருக்கு ரூ.21,55,740 மதிப்பில் சிறப்பு மடக்கு சக்கர நாற்காலிகள், பெட்ரோல் ஸ்கூட்டர், மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள் மற்றும் திருமண உதவி தொகையாக 104 கிராம் தங்கம் ஆகியவற்றை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வழங்கினார்.

பின்னர், பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் கொடிநாளை முன்னிட்டு முன்னாள் படை வீரர்ரகளுக்கு மரியாதை செய்தார். தேனீர் விருந்தும் அளிக்கப்பபட்டது.
இலங்கை வாழ் தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகளும், அல்ட்ரா சிமெண்டஸ் நிறுவனம் மூலம் வழங்கப்பட்ட தானியங்கி இரத்த செல் கணக்கீடும் கருவியை பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு வழங்கினார்.

பெரம்பலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட, ஆலம்பாடி, கல்பாடி, வேப்பந்தட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியவடகரை, பாண்டகப்பாடி, பிரம்மதேசம், தேவையூர்
ஊராட்சிமன்ற அலுவலகங்களை திறந்து வைத்தார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!