Newborn baby bag rolled up at the bottom of the bridge, threw the mother! Perambalur Police are investigating!

பெரம்பலூர் அருகே பெற்ற குழந்தையை கை பையில் சுருட்டி பாலத்திற்கு அடியில் வீசி சென்ற தாயை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பெரம்பலூர் அடுத்த எளம்பலூர் அருகே செல்லும் சுற்றுச் சாலையில் இருக்கும் பாலத்தின் கீழே பைக்குள், துண்டில் சுற்றி வீசப்பட்ட, நேற்று பிறந்த பெண் குழந்தையை நாய் கவ்வி இழுக்கும் போது அலறல் சத்தத்தை கேட்ட அங்கிருந்த பெண் ஒருவர் ஓடிச்சென்று நாயிடம் இருந்து குழந்தையை உயிரோடு மீட்டு நாயை விரட்டி விட்டார். இந்த தகவல் கிராமத்தினற்கு தெரிய வந்தது. இது குறித்து பெரம்பலூர் போலீஸார் மற்றும் சுகாதாரத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவர்கள் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசுத் தலைமை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். பிரசவித்த பிறகு தூக்கிவீசிய பெண் யார் என? சுகாதாரத் துறை, காவல்துறை எளம்பலூர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!