Nutrition workers demonstrated at Perambalur condemning the District Collector’s Personal Direct assistant பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா போராட்டம் நடத்தினர்.
பெரம்பலூரில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக(தேர்தல்) பணியாற்றும் அமர்சிங் என்பவர் சத்துணவு மைய பார்வைக்கு செல்லும் போது, சத்துணவு ஊழியர்களை தரக்குறைவாக பேசுவதாக குற்றம் சாட்டியும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தேக்க நிலை ஊதியத்தை நிலுவையுடன் வழங்கிட வேண்டும், மருத்துவ காப்பீட்டுத் தொகை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் 200க்கும் மேற்ப்பட்டோர் மாவட்ட தலைவர் செல்லபிள்ளை தலைமையில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது, தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியதோடு, தரையில் அமர்ந்து சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தர்ணா செய்தனர்.