Nutrition workers protest against the Perambalur District Collector
பெரம்பலூரில் நடடிவக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியரை கண்டித்து சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர் உதவியாளர்கள் ஆகியோரை மாவட்ட ஆட்சியரின் தேர்தல் நேர்முக உதவியாளர் அமர்சிங் என்பவர் தரக்குறைவாக பேசுவதாகவும், தொலைத்தூரத்திற்கு மாற்றம் செய்து மிரட்டுவதாகவும், ஒருமையில் பேசி அவமானப்படுத்துவதுடன் பொய்யான குற்றாச்சாட்டுகளை சுமத்தி தண்டிப்பதாகவும், ஆய்வுக்கூட்டம் என்ற பெயரில் பெண் ஊழியர்களின் ஏழ்மையை பரிகாசம் செய்வதை புகார் கொடுத்தும் நடவகக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியரை கண்டித்து இன்று மாலை சத்துணவு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி, பின்னர் நியாயம் கிடைக்கும் வரை ஆட்சியர் அலுவலகத்தில் சமைத்து சாப்பிட்டு காத்திருப்பதாக அறிவித்து இன்று காத்து இருந்தனர். இது குறித்து தகவல் அறிந்த காவல் , வருவாய் துறையினர், சத்துணவு திட்ட அதிகாரிகள் போராட்டம் நடத்திய சத்துணவு ஊழியர்களிடம் பேச்சு நடத்தி மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தப்பின்னர் கலைந்து சென்றனர்.