Occupation of government land near Namakkal the village official petition seeking removal
நாமக்கல் அருகே உள்ள கல்யாணி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிசாமியிடம் கொடுத்துள்ள மனு:
கல்யாணி கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் ஊரிலிருந்து ராசிபுரம்- ஈரோடு நெடுஞ்சாலையை சென்றடைய கிராம நத்தம் மற்றும் புறம்போக்கு நிலம், அரசு புறம் போக்கு நிலம் வழியாக செல்லவேண்டும்.
கடந்த 1993-94ல் சரி செய்து ஜல்லி ரோடு போடப்பட்டது. எங்கள் ஊருக்கு பஸ் வசதி அப்பாதை வழியாக தான் வந்துகொண்டிருந்தது. தற்போது அப்பாதை சரியில்லாத காரணத்தால் பஸ்கள் வருவதில்லை. மேலும் அப்பாதையின் இருபுறமும் உள்ள நிலத்தின் உரிமையாளர்கள் அனைவரும் பாதையை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
இதனால் பாதை குறுகலாகிவிட்டது. இதனால் பஸ் மற்றும் விவசாயம் சார்ந்த அனைத்து வாகனங்களும் செல்லவில்லை. இவ்வாறு உள்ள நிலையில் ஆங்காங்கே ஒரு சில மின் கம்பங்கள் தாறுமாறாக ஊன்றி இருப்பதால் பாதையில் இடையூறு ஏற்படுவதால் வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது.
ஆகவே மேற்படி பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை நீக்கியும் மீண்டும் அப்பாதையில் பராமரிப்பு பணி செய்து தரவேண்டும் என தெரிவித்துள்ளனர்.