Ogaloor Government Higher Secondary School NSS Camp: Vellar Bridge Cleaning Service.

பெரம்பலூர் : ஒகளூர் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் அகரம்சீகூரில் என்எஸ்எஸ் முகாம் நடந்தது. முதல் தினத்தன்று விழாவிற்கு கனரா வங்கி மேலாளர் சின்னிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியர் நாகராஜன் முகாமினை தொடக்கி வைத்தார். முகாம் திட்ட அலுவலர் கரிகாலன் அனைவரையும் வரவேற்றார்.

முன்னாள் தலைமை ஆசிரியர் அண்ணாதுரை, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் பாலசுப்ரமணியன், சுப்ரமணியன், சிறுமலர் பள்ளி தாளாளர் முத்தமிழ்செல்வன், அகரம்சீகூர் தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் ரவி உட்பட பலர் பேசினர்.

என்எஸ்எஸ் மாணவர்கள் கோயில், தெருக்கள், மற்றும் பள்ளி வளாகம், அகரம்சீகூர் பார்டர் – திட்டக்குடியை இணைக்கும் வெள்ளாற்று பாலம் உட்பட்ட இடங்களில் தூய்மை பணி மேற்கொண்டனர்.

மரக்கன்றுகள் நடப்பட்டன. மாலையில் நாட்டுக்கு உழைத்த நல்லவர்கள் என்ற தலைப்பில் லப்பைக்குடிக்காடு ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் சேக்தாவுத், சமுக முன்னேற்றத்தில் கல்வியின் பங்கு என்ற தலைப்பில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமராசுவும் உறையாற்றினார்கள்.

முகாமில் ஒகளுர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்குபெற்றனர். முடிவில் பட்டதாரி ஆசிரியர் பெரியசாமி நன்றி கூறினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!