On behalf of the Central Cooperative Bank housing loan Camp
பெரம்பலூர்: திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி; பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், அரும்பாவூர், லெப்பைகுடிகாடு, செட்டிகுளம், வி.களத்தூர், பாடாலூர், குன்னம், வேப்பந்தட்டை உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வருகிறது.
கிராமப்புறங்களை மையமாக கொண்ட பெரம்பலூர் மாவட்டத்தின் வளர்ச்சியில் பெரும் பகுதி கூட்டுறவு சங்கங்கள் வங்கிகள் மூலம் பொதுமக்கள் பயன் பெற்று வருகின்றனர். அதனடிப்படையில் குறைந்த வட்டியில் வீட்டுவசதி கடன் முகாம் பெரம்பலூர் சங்குபேட்டை அருகிலுள்ள வங்கிக் கிளையில் நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி மத்திய கூட்டுறவு வங்கியின் உதவி பொது மேலாளர் கோ.பாபு தலைமை வகித்தார். நிர்வாகக்குழு உறுப்பினர்கள் எம்.என்.ராஜாராம், பி.சித்ரகுமார், செல்வராணி ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர். 115 கடன் விண்ணப்பங்களை தேர்வு செய்து திருச்சி தலைமை அலுவலகம் மூலம் பரிசீலணை செய்ய அனுப்பப்பட்டது.
இம்முகாமில் கலந்து கொண்டு பதிவு செய்தவர்களுக்கு சேவைக்கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், இந்த கடன் முகாமில் கலந்து கொள்ள இயலாத பொது மக்கள் அவர்கள் வசிக்கும் இடத்தின் அருகாமையில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிக்கிளையில் உரிய ஆவணங்களுடன் அணுகி பயன் பெறலாம் என வங்கி தலைமை அலுலகம் சார்பில் தொpவிக்கப்பட்டுள்ளது. கிளை மேலாளர்கள் களப்பணியாளர்கள் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். பெரம்பலூர் வங்கிக் கிளை மேலாளர் முருகேசன் நன்றி தெரிவித்தார்.