On behalf of the Clean movement, veppur women’s college promises

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூரில் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் சார்பில் தூய்மையே சேவை என்ற முனைப்பியக்கம் சார்பில் திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லாத கிராமமாக உருவாக்க வேண்டி பெரம்பலூர் திட்ட இயக்குநர் ஸ்ரீதர் முன்னிலையில் மகளிர் கல்லூரியில் உறுதி மொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வேப்பூர் ஊராட்சியில் உள்ள அனைத்து தெருக்கள் மற்றும் பள்ளிகளில் மற்றும் அரசு மகளிர் கல்லூரியில் இந்த தூய்மை இயக்கத்தின் மூலம் சுத்தம் செய்வது எப்படி சுத்தம் செய்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து கல்லூரி மாணவிகளிடையே விழிப்புணர்வு செய்யப்பட்டது.

மேலும், வேப்பூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் உள்ள சத்துணவு மையங்களை வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு செய்து சுத்தமாக வைத்துக் கொள்ளும் படி அறிவுருத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அரசு மகளிர் கல்லூரி முதல்வர் சுப்பிரமணி, வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், செந்தில், மோகன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் , ஊராட்சி செயலர், ராமச்சந்திரன் பொதுமக்கள், கல்லூரி மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டு தாங்கள் வசிக்கும் பகுதிகளை சுத்தமாக வைத்து கொள்வோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!