On behalf of the police in Perambalur, the survivors were killed during the work
1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதியன்று லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர்த் தாக்குதலில் மத்தியப் பாதுகாப்புப் படைக் காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில், பணியின் போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ம் தேதி ‘காவலர் வீரவணக்க நாள்’ அனுசரிக்கப்படுகிறது.*
அதன்பேரில், இன்று பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் எளம்பலூர் தண்ணீர் பந்தல் பகுதியில் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள காவலர் நினைவுச் சின்னத்தில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.
இதில் பெரம்பலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்திஷாமிட்டல் கலந்து கொண்டு, உயிர் நீத்த காவலர்களின் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அதனைத்தொடர்ந்து காவல்துறை உயர் அதிகாரிகள், காவலர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
பின்னர் துப்பாக்கிக் குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள், ஓய்வு பெற்ற காவல் உயர் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.