On the occasion of Margazhi’s birth, Dhanur Puja at Perambalur Pramhapuriswarar Temple!

பெரம்பலூர் நகரத்தில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில், மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு தனுர் பூஜை முதல் நாளான இன்று விடிற்காலை கோமாதா பூஜையுடன் விழா தொடங்கியது. முன்னதாக ஈசன் மற்றும் அம்பாள் மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. விழாவில் சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். விழா மார்கழி மாதம் முழுவதும் காலை 5 மணி முதல் 6 மணி வரை நடைபெறுகிறது.

தனுர் மாத பூஜைக்காக நம்மால் முடிந்த ஏதாவது பிரசாத நைவேத்தியத்தை, கோவிலுக்கு வருபவர்களுக்கு பிரசாதமாக வழங்கினால் ஒரு ஆண்டு முழுவதும் அன்ன தானம் செய்த பலன் கிடைக்கும், தனுர் மாத பூஜை செய்வதும், கோவில்களில் நடைபெறும் பூஜைகளில் பங்கேற்பதும் தெய்வ அருளை பரிபூரணமாக பெற்றுத் தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!