Once the two-month camp for Special grievance Disabilities: Collector

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல்:

மாற்றுத் திறனாளிகளின் மீது சிறப்பு கவனம் செலுத்தி பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகின்றது. அரசின் திட்டங்கள் குறித்து விளக்கவும், அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் நலத்திட்ட உதவிகள் சென்று சேரும் வகையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு என்று சிறப்பு குறைதீர்க்கும் முகாம்களை இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நடத்த வேண்டுமென்று தமிழக அரசு உத்தரவிட்டதன் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் பிப்ரவரி மாதத்திற்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் 05.02.2018 நடைபெறவுள்ளது.

அதேபோல, மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் சிறப்பு முகாம்கள் ஏப்ரல் மாதத்தில் 02.04.2018 அன்றும், ஜுன் மாதத்தில் 04.06.2018 அன்றும், ஆகஸ்ட் மாதத்தில் 06.08.2018 அன்றும், அக்டோபர் மாதத்தில் 01.10.2018 அன்றும், டிசம்பர் மாதத்தில் 03.12.2018 அன்றும் நடைபெறும்.

இம்முகாம்களில், பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கும் அனைத்து மாற்றுத் திறனாளிகளும் பங்கேற்று தங்களின் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக வழங்கி பயன்பெறலாம்.

இச்சிறப்பு குறைதீர்க்கும் முகாம்களுக்கு வரும் போது தங்களின் கோரிக்கை மனுவுடன் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போட்சைஸ் போட்டோ(4) ஆகியவற்றை கொண்டுவர வேண்டும், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!