One lakh worth of cash and goods theft was broken in the locker shop in Perambalur
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே நகராட்சி பின்புறம் முத்துசாமி மகன்கள் நல்லுசாமி (வயது 42), முருகேசன் (வயது 39) ஆகிய இருவரும் மளிகை கடை நடத்தி வருகின்றனர்.
முருகேசன் கடையை ஒட்டி உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்றிரவு அங்கு வந்த கொள்ளையர்கள் முருகேசன் வீட்டை நோட்டமிட்டு ஜன்னல் வழியாக கோலமாவு டப்பாவை தள்ளிவிட்டு ஆழ்ந்து உறங்குகின்றனரா என சோதித்து உள்ளனர்.
பின்னர், வீட்டின் வெளித்தாழ்பாளை போட்டுவிட்டு கடையின் பூட்டை உடைத்து கடையில் இருந்த ரூ. 85 ஆயிரம் ரொக்கம், ரூ. 8 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் ரீசார்ஜ் கார்டுகள், 2 ஆயிரம் மதிப்புள்ள விலையுயர்ந்த சாக்லெட்டுகள், மற்றும் பிற பொருட்களை களவாடி சென்றனர்.
இது குறிதது கடையின் உரிமையாளர்கள் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், அங்கிருந்த சி.சி.டி.வி கேமரா வீடியோ ஆதாரங்களை வைத்தும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
அடுத்தடுத்த தொடர் கொள்ளைகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர்.