Ooty Mountain Rail fares Hike 5 Times on October 8. The announcement of Southern Railway

ஊட்டி மலை ரயில் கட்டணம் வரும் அக்டோபரில் இருந்து 5 மடங்கு வரை உயர்த்தப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சர்வதேச சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள்தோறும் மேட்டுப்பாளையத்தில் இருந்து மலை ரயில் இயக்கப்படுகிறது.

குறிப்பாக, மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையில் இயக்கப்படும் நீராவி இன்ஜின் பொருத்தப்பட்டு பல் சக்கரத்தில் இயங்கும் மலை ரயிலில் பயணிக்கவே அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.

மலை ரயில் இயக்கப்படுவதால் தெற்கு ரயில்வேக்கு ஆண்டுக்கு 24 கோடி வரை நஷ்டம் ஏற்படுகிறது.

இதனால், மலை ரயிலின் கட்டணத்தை உயர்த்தி ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த கட்டணம் வரும் அக்டோபர் மாதம் 8ம் ேததி முதல் அமலுக்கு வருகிறது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு முதல் வகுப்பு கட்டணம் 195-ல் இருந்து 395 ஆகவும், இரண்டாம் வகுப்புக்கு 30-ல் இருந்து 130 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யப்படாத இரண்டாம் வகுப்புக்கு 15 வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது 75 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம்-குன்னூருக்கு 174-ல் இருந்து 295 ஆகவும், இரண்டாம் வகுப்பு 25ல் இருந்து 65 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யப்படாத இரண்டாம் வகுப்பு 10ல் இருந்து 45 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

குன்னூர்-ஊட்டிக்கு முதல் வகுப்பிற்கு 140-ல் இருந்து 225 ஆகவும் இரண்டாம் வகுப்பு 25ல் இருந்து 70 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. முன் பதிவு செய்யப்படாத இரண்டாம் வகுப்பிற்கான கட்டணம் 10ல் இருந்து 35 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 5 மடங்கு வரை மலை ரயில் கட்டணம் உயர்த்தப் பட உள்ளது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனினும், கட்டண உயர்வால் நஷ்டத்தை ஈடு செய்துவிட முடியாது என்று என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!