Opening today, the water from the Visuwa kudi dam near Perambalur
பெரம்பலூர் அருகே உள்ள விசுவக்குடி நீர்த்தேக்கத்தில் இருந்து குடிநீர் பயன்பாட்டிற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், தொண்டைமாந்துறை கிராமத்தில், உள்ள விசுவக்குடி நீர்த்தேக்கத்தில் இருந்து பொதுமக்களின் கோரிக்கைக்காக, இன்று பெரம்பலூர் ச.ம.உ இரா.தமிழ்ச்செல்வன் அணையில் இருந்து இன்று திறந்து வைத்தார். பின்னர், நீர்த்தேக்க மதகில் இருந்து வெளியேறிய நீரில் மலர்த்தூவினார்.
அணையின் மொத்த கொள்ளளவான 41.6 அடி உயரத்தில் தற்போது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் தேங்கிய 21.35 அடி தண்ணீரில், இன்று 7 அடி தண்ணீர் ( 7 மில்லியன் கன அடி) குடிநீர் தேவைக்கும், நிலத்தடி நீர் மட்ட உயரவும், திறந்து விடப்பட்டுள்ளர். வினாடிக்கு 127 கன அடி வீதம் மதகில் இருந்து தண்ணீர் வெளியேறி வருகிறது.
இந்த நீரால், தொண்டைமான்துறை, பூஞ்சோலை, விசுவகுடி, வெங்கலம், பிள்ளையார்பாளையம், பகுதிகள் பயன்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியின் போது பொதுப்பணித்துறை நீர்வளத்துறை அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் உடனிருந்தனர்.