Opportunity for renewed employment registration
வேலைவாய்ப்பு பதிவினை புதுப்பிக்க தவறியவர்களுக்கான சிறப்பு புதுப்பித்தல் திட்டத்தின் கீழ் வரும் 21.11.2017-க்குள் புதுப்பித்துக் கொள்ளலாம் என வேலைவாய்ப்பு அலுவலகம் அறிவிப்பு செய்துள்ளது.
பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளதாவது:
தமிழகத்தில் வேலைவாய்ப்பு வேண்டி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் தங்களின் கல்வித்தகுதியை பதிவு செய்து 2011 முதல் 2015 வரையிலான காலத்தில் பல்வேறு காரணங்களினால் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைவாய்ப்பு பதிவினை 2011, 2012, 2013, 2014 மற்றும் 2015-ஆம் ஆண்டுகளில் புதுப்பிக்க தவறியவர்கள் சிறப்பு புதுப்பித்தல் சலுகையின் கீழ் 21.11.2017-க்குள் வேலைவாய்ப்பு துறையின் இணையதள முகவரியான www.tnvelaivaaippu.gov.in என்ற இணையத்தளத்தின் மூலமாக புதுப்பித்தல் செய்து கொள்ளலாம்.
மேலும், பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வேலைநாட்களில் நேரில் வந்தும் புதுப்பித்து பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.