Opposition parties including DMK have demonstrated in Perambalur to emphasize various demands

இயற்கை நீர்வளப்பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளனர்.

இதையொட்டி பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள திமுக உள்ளிட்ட அனைத்துகட்சிகளும் மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன் தலைமையில் பாலக்கரை ஆட்சியர் வளாக நுழைவு வாயிலில் இருந்து பேரணியாக புறப்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அம்மா உணவகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டததில், விவசாய கடன் தள்ளுபடி, பயிர் இன்சூரன்ஸ் வழங்கிட வேண்டும், கரும்பு நிலுவைத்தொகை வழங்கிட வேண்டும், பெரம்பலூர் சர்க்கரை ஆலை நவீனப்படுத்தி, இணை மின்சார திட்டத்தை தொடங்க வேண்டும், சின்ன முட்லல் நீர்த்தேக்க திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் திமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமார், ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, உள்ளிட்ட வி.சி.க, கம்யூனிஸ்ட் கட்சியினர், விவசாய சங்கத்தினர், திராவிட கழகத்தினர், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து சுமார் 300 பேர் கலந்து கொண்டனர்.

காணொளி இணைப்பு :

DMK Perambalur

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம்

Posted by பெரம்பலூர் செய்திகள் on Mittwoch, 16. August 2017


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!