Overseas and awareness camp, camp registration

வெளிநாட்டு வேலைவாய்ப்பினை நாடுவோரின் நலனைக் கருத்தில் கொண்டு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான விழிப்புணர்வு மற்றும் பதிவு முகாமினை தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தவுள்ளது. இந்த விழிப்புணர்வு மற்றும் பதிவு முகாமில், அயல்நாட்டு வேலைவாய்ப்பு குறித்த விளக்கங்கள் மற்றும் பதிவு செய்தல் போன்ற விவரங்கள் வழங்கப்படும்.

மேற்படி முகாமில் சவூதி அரேபியாவிலுள்ள முன்னனி தனியார் மருத்துவமனைக்கு இரண்டு வருட பணி அனுபவம் மற்றும் 35 வயதிற்குட்பட்ட பிஎஸ்சி அல்லது டிப்ளமோ தேர்ச்சியுடன் சவூதி புரோமெட்ரிக் தேர்ச்சி பெற்ற பெண் செவிலியர் பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் ரூ.980- பதிவுக் கட்டணத்தைச் செலுத்தி அதற்கான விண்ணப்பப் படிவம் பெற்று பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், ஓமன் நாட்டிலுள்ள ஒரு முன்னணி நிறுவனத்திற்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ஏதாவது ஒரு நிறுவனத்தில் இரண்டு வருட பணி அனுபவத்துடன் 22 முதல் 26 வயதிற்குட்பட்ட இயந்திரம் இயக்குபவர்கள் (Machine Operators) தேவைப்படுகிறார்கள். மேலும், இப்பதிவு மற்றும் விழிப்புணர்வு முகாமில் பணி அனுபவம் பெற்ற இதர தொழில் பிரிவினரும் கலந்து பயன் பெறலாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

எனவே தகுதியுள்ள இயந்திரம் இயக்குபவர்கள் ஒரிஜினல் பாஸ்போர்ட், சுய விவரங்கள் அடங்கிய வண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் நீலநிற பின்னணியில் எடுக்கப்பட்ட ஐந்து புகைப்படத்துடன் திருச்சி மாவட்ட வேலைபாய்ப்பு அலுவலகத்தில் (மன்னார்புரம்) 26.02.2017 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 8.00 மணி முதல் முதற்கட்டத் தேர்விற்கு வருமாறும், பெண் செவிலியர்கள் விழிப்புணர்வு மற்றும் பதிவு முகாமில் பதிவுக் கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்ப படிவத்தைப்பெற்று பதிவு செய்து எதிர்கால நிகழ்வுகளில் நடத்தப்பெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்றும், மேலும் விபரங்களுக்கு 044-22505886 (அ) 22502267 என்ற தொலைபேசி மூலமாகவோ அல்லது http://www.omcmanpower.com, என்ற நிறுவன வலைதளத்திலும் அறிந்து கொள்ளலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!