pandagappadi village dro mcp

பாண்டகப்பாடி கிராமத்தில் மனுநீதி நிறைவு நாள் விழா : 80 பயனாளிகளுக்கு ரூ.16.07 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்ட்டது

பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலரின் சிறப்பு மனுநீதி நிறைவு நாள் விழா வேப்பந்தட்டை வட்டம், பாண்டகப்பாடி கிராமத்தில் இன்று மாவட்ட வருவாய் அலுவலர் பா.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வேளாண்மைத்துறை, வருவாய்த் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, பிறபடுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை உள்ளிட்ட அனைத்துத்துறைகளின் அலுவலர்களும் தங்கள் துறைசார்ந்த திட்டங்கள் குறித்தும்,

இத்திட்டங்கள் மூலமாக பொதுமக்கள் பயன் பெறுவதற்கு உண்டான வழிமுறைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 2 நபர்களுக்கு ரூ.2,40,000 மதிப்பிலும், 8 நபர்களுக்கு 2,40,000 மதிப்பிலான வீட்டுமனை பட்டாக்களையும், 13 நபர்களுக்கு நத்தம் பட்டாக்களையும், 6 நபர்களுக்கு பட்டா மாற்ற ஆணைகளையும்,

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 10 நபர்களுக்கு ரூ.40,825 மதிப்பில் விலையில்லா சலவைப்பெட்டி மற்றும் தையல் இயந்திரங்களையும்,

வேளாண்துறை சார்பில் 3 நபர்களுக்கு சுழல் கலப்பை மற்றும் மின்கல தெளிப்பான் உள்ளிட்டவைகளை ரூ.2,26,500 மதிப்பிலும்,

புது வாழ்வுத் திட்டத்தின் சார்பில் 38 குழுக்களுக்கு ரூ.8,60,000 மதிப்பிலான கடனுதவிகளையும் என 80 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.16,07,325- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.

இக்கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன், மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் இருதயமேரி, வருவாய் வட்டாட்சியர் மருதைவீரன், வட்டாட்சியர் (ச.பா.தி) ஏழுமலை மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!