Parliament Siege Struggle: Joint Action Committee Conference of Trade Unions in Perambalur

பெரம்பலூh; அக் 8. இந்திய உழைப்பாளி மக்களின் 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நவம்பர் மாதம் 9 முதல் 11. வரை மூன்று நாட்கள் முற்றுகை போராட்டம் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் நடைபெறுவதையொட்டி மாவட்ட அனவில் மூன்று கட்டமாக 8.10.2017 அன்று கருத்தரங்கம், 24.10.2017 அன்று மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கமும் மாலை தர்ணா போராட்டமும் நடத்தப்டுகிறது.

அதைமுன்னிட்டு இன்று காலை பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற கருத்தரங்கத்திற்கு எல்.பி.எப் மாவட்ட செயலாளர் ஆர். ரெங்கசாமி தலைமை வகித்தார். சிஐடியு மாநிலசெயலாளர் பி.கருப்பையன் சிறப்புரையாற்றினார்.

ஹெச்.எம்.எஸ் மாவட்ட துணைத் தலைவர் ப.மின்னல்ஹபீப், அங்கன்வாடி ஊழியர் சங்கம் கே.மணிமேகலை, விவசாய தொழிலாளர் சங்கம் வி.ஜெயராமன், எல்பிஎப் முன்னாள் தலைவர் கே.கே.குமார், செல்வராஜ், சித்திரவேல் சிஐடியு மாவட்ட தலைவர் ஆர்.சிற்றம்பலம், மாவட்ட செயலாளா; ஆர்.அழகர்சாமி, ஏஐடியுசி தியாகராஜன், ஆகியோர் விளக்கவுரையாற்றினர்.

நவீன தாராளமய பொருளாதார கொள்கைகளை கைவிட வேண்டும், அத்தியாவசிய பண்டங்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர் சட்டங்களை கறாராக அமல்படுத்த வேண்டும், பொதுத் துறையை தனியாருக்கு விற்கும் எண்ணத்தை கைவிட வேண்டும்,

புதிய பென்சன் திட்டத்தை வாபஸ்பெற வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் 18 ஆயிரம் வழங்க வேண்டும், விவசாய பொருட்களுக்கு கட்டுபடியான விலை வழங்கிட வேண்டும், சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை தடை செய்ய வேண்டும், காண்டிராக்ட், கேசுவல், தொகுப்பூதியம், மதிப்பூதியம், அவுட்சோர்சிங் முறையை ரத்துசெய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் கருத்தரங்கத்தில் விவாதிக்கப்பட்டது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!