pention Family Fund, the 6 lakh 37 thousand authorities provided no medical fund in perambalur

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஓய்வூதிய இணை இயக்குநர் ராமசந்திரன் முன்னிலையில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.மீனாட்சி தலைமையில் மாவட்ட ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது.

dro-2016இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.மீனாட்சி தெரிவித்ததாவது:

அரசு அறிவிக்கும் பல்வேறு நலத்திட்டங்களை, அரசு பணியாளர்கள் மூலமாக பொதுமக்களுக்கு கொண்டு சென்று, பொதுமக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு அரசு செயல்பட்டு வருகிறது.

மேலும், அரசு அலுவலர்கள் வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெறும் போது அவர்கள் செய்த சேவைகளை கருத்தில் கொண்டு, ஓய்வுப்பெற்ற அரசு அலுவலர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு சலுகைகளை அரசு வழங்கி வருகின்றது.

ஓய்வுதியர்களின் வயதான காலத்தில் அவர்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு மருத்துச்செலவிற்காக ஒவ்வொருவரு ஓய்வுதியதாரருக்கும் மருத்துவ நலநிதியாக ரூ.1,00,000 வழங்கப்பட்டு வருகின்றது.

நடப்பு ஆண்டு முதல் ஓய்வூதியதார்களின் மருத்துவ செலவை ரூ.4,00,000- வரை மேற்கொள்ள ஏதுவாக தமிழக முதலமைச்சர் ஓய்வூதியதாரர்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

ஓய்வூதியதாரர்கள் இறக்கும் சமயத்தில் அவர்ககைளை சார்ந்து வாழும் நபர்களின் மேம்பாட்டிற்காக குடும்பம் ஒன்றிக்கு ரூ.35,000மாக வழங்கப்பட்டு வந்த குடும்ப நல நிதியை தமிழக முதலமைச்சர் ரூ.50,000 உயர்த்தி வழங்க ஆணையிட்டுள்ளதன் அடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 195 ஓய்வூதியதார்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ரூ.80,40,000 வழங்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவ நல நிதியாக 389 ஓய்வூதியதாரர்களுக்கு பல்வேறு சிகிச்சைகள் மேற்கொள்ள வசதியாக ரூ.64,45,694 மதிப்பில் மருத்துவ நல நிதியும் வழங்கப்பட்டுள்ளது, என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் 10 நபர்களுக்கு குடும்ப நல நிதியாக ரூ.5,00,000-ம், 3 ஓய்வூதியதார்களுக்கு மருத்துவ நல நிதியாக ரூ1,37,113 ற்கான காசோலைகளை ஓய்வூதிய இணை இயக்குநர் ராமசந்திரன் முன்னிலையில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.மீனாட்சி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் மாரிமுத்து(பொது), சிலுப்பன்(கணக்குகள்), மாவட்ட கருவூல அலுவலர் சீனிவாசன், உதவி கருவூல அலுவலர் சுடலைமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!