People who came to petition the electoral law came into force without
உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியானதும் தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துவிட்டது. இந்த நிலையில் இன்று திங்கள் கிழமை வழக்கமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மனுக் கொடுக்க வந்த பொதுமக்கள் மனுக் கொடுக்க அதிகாரிகள் இல்லாததால், மனுக்களை கொண்டு செல்லக் கூடாது என்பதற்காக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மனு பெட்டி வைக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் கொண்டு வந்த மனுக்களை அந்த மனுப் பெட்டியில் போட்டுச் சென்றனர்.
தேர்தல் விதிமுறைகள் அறிவிப்பு குறித்து முறையாக அறிவிப்பை தேர்தல் ஆணையம் செய்யாததால், பொதுமக்கள் மாவட்ட நிர்வாக அலுவலகத்தில் வழக்கமாக நடக்கும் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் இன்றும் நடக்கும் என நினைத்து கொண்டு வந்திருந்தனர்.
முன்கூட்டியே முறையாக மாவட்ட நிர்வாகம் முறையான அறிவிப்பு செய்யாததால் வீணாக வேலைகளை விட்டு விட்டு பொது மக்கள் பல கி.மீ தூரம் வந்து சென்றனர் என்பது குறிப்பிட்தக்கது.