People’s Court in Perambalur: Legal Services Commission calls!

பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

வருகின்ற மார்ச்.12 சனிக்கிழமை அன்று தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் ஆணையின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் நடைபெற்று வரும் வழக்குகளை சமரசம் செய்து, முடித்துக் கொள்ள அரிய வாய்ப்பாக தேசிய மக்கள்மன்றம்(NATIONAL LOK ADALAT) நடைபெற உள்ளது.
இதில் பொதுமக்கள் – வழக்காடிகள் நீண்டகாலமாக நிலுவையிலுள்ள தங்கள் வழக்குகளை, குறிப்பாக சொத்து வழக்குகள் மற்றும் வங்கி கடனுதவி, தனிநபர் கொடுக்கல்-வாங்கல் சம்பந்தப்பட்ட வழக்குகள் மற்றும் திருமண உறவு தொடர்பான வழக்குகள், குற்றவியல் வழக்குகள் (சமாதானமாக போககூடிய வழக்குகள்) ஆகியவற்றில் தீர்வு கண்டு சமரசமாக செல்ல ஓர் அரிய வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ளலாம். தரப்பினர் நீதிமன்ற கட்டணமாக செலுத்தியுள்ள முழுத்தொகையையும் திருப்பி பெற்றுக்கொள்ளலாம். சமரசமான அன்றைய தினமே தீர்ப்பு நகல் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். தீர்ப்பு(AWARD)க்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடியாது.
தரப்பினர்களுக்கு வெற்றி-தோல்வி என்ற மனப்பான்மை ஏற்படாது. எனவே, பொதுமக்கள்-வழக்காடிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, பயனடையுமாறும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, பெரம்பலூர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04328-296206 என்ற தொலைபேசியின் வாயிலாக தொடர்பு கொண்டு, பெற கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!