People’s grievance day meeting: Rs. 5.50 lakh worth welfare assistance; Presented by Perambalur Collector

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா தலைமையில் இன்று நடந்த, மக்கள் குறைத் தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

இக்கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் மூலம், சிறு குறு தொழிலுக்கான ரூ.25,000- மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 8 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.25,000- மானியம் வீதம் ரூ.2,00,000- மானியமும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மூலம் தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 4 நபர்களுக்கு மொத்தம் ரூ.3,50,000- நிவாரண நிதி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வெங்கடபிரியா வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அமைக்கப்பட்டுள்ள இந்திய திருநாட்டின் விடுதலைக்கு பாடுபட்ட பெரம்பலுார் மாவட்டத்தைச் சேர்ந்த சுதந்திரப்போராட்ட தியாகிகள் மற்றும் தாய்மொழியின் வளர்ச்சிக்கு பாடுபட்ட தமிழறிஞர்களின் நினைவைப்போற்றும் வகையில் அவர்களின் திருவுருவங்கள் அடங்கிய நிரந்தரப் புகைப்படக் கண்காட்சினை கலெக்டர் திறந்துவைத்து பார்வையிட்டார்.

இக்கூட்டத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொழில் தொடங்க கடனுதவி, வீட்டு மனைப் பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக்கூலி உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்விக் கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 175 மனுக்கள் பெறப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் நா.அங்கையற்கண்ணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ.லலிதா, தனித்துணை ஆட்சியர் சமூக (பாதுகாப்புத்திட்டம்) சரவணன், மாற்றுத் திறனாளிகள் நல அலுவவலர் பொம்மி, உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொணடனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!