People’s Meeting Movement on behalf of the Tamil Nadu Science Movement

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், மக்கள் சந்திப்பு இயக்கம் மற்றும் திரளானோர் புத்தக வாசிப்பு நிகழ்ச்சி பெரம்பலுார் லட்சுமி மருத்துவமனை வளாக கூட்டரங்கில் நேற்று நடந்தது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், கடந்த அக்டோபர் 14ம் தேதி முதல் மக்கள் சந்திப்பு இயக்கம் நடந்து வருகிறது. இதன் ஒருபகுதியாக, திரளானோர் புத்தக வாசிப்பு நிகழ்ச்சி பெரம்பலுார் லட்சுமி மருத்துவமனை வளாக கூட்டரங்கில் நடந்தது. இந்நிகழ்ச்சியை தமிழ்நாடு அறிவியல் இயக்க கெளரவ தலைவர் டாக்டர் கருணாகரன் துவக்கி வைத்தார். மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர் பேசியதாவது: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் கடந்த அக்டோபர் 14ம் தேதி முதல் ஆளுக்கொரு புத்தகம் என்ற பெயரில் மக்கள் சந்திப்பு இயக்கம் துவக்கினோம். வீட்டுக்கொரு நுாலகம் அமைக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். இதுவரை 10 ஆயிரம் வீடுகளில் நுாலகம் அமைக்கவும், பெரம்பலுார் மாவட்டத்தில் 1,000 வீடுகளில் நுாலகம் அமைக்கவும் பேசியுள்ளோம்.

இதன் ஒருபகுதியாக, ஆளுக்கொரு புத்தகம் தருவது என்ற அடிப்படையில் இன்று இங்கு நுாற்றுக்கும் மேற்பட்டோருக்கு புத்தகம் வழங்கி, திரளாக நின்று புத்தக வாசிப்பு நிகழ்ச்சியை நடத்தி உள்ளோம். இதனால், புத்தகம் படிப்பவர்களின் எண்ணிக்கை கூடும். அறிவியல் கதைகள், கட்டுரைகள், விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாறு, அறிவியல் பரிசோதனைகள், கணித ஆய்வுகள், சுற்றுச்சூழல், சமையலறையில் விஞ்ஞானம், ஒளி விளையாட்டு, விதிகள் போன்றவை குறித்த புத்தகங்களை வழங்கி வருகிறோம். இதில், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் பங்கெடுத்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!