Perali auxiliary power station areas, power shutdown day after tomorrow
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், பேரளி துணை மின் நிலையத்துக்குட்பட்ட கிராமங்களில் நாளைமறுநாள் புதன் கிழமை (டிச.21) மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பேரளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பேரளி, மருவத்தூர், ஒதியம், பனங்கூர், கல்பாடி, குரும்பாபாளையம் ஆகிய கிராமங்களில் நாளை செவ்வாய்கிழமை காலை 9.45 மணி முதல் பராரிப்பு பணிகளை நிறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது என அதில் தெரிவித்துள்ளார்.