Perambalur: 18 vacant posts, including Deputy Zonal Commander, in the Home Guard Force; Police Department announcement!

பெரம்பலூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 15 ஆண்கள், 2 பெண்கள் என மொத்தம் 17 காலிப்பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. ஊர்க்காவல் படை துணை மண்டல தளபதி (DAC) காலி பணியிடத்திற்கு பெண்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ள பெண்கள் ஊர்க்காவல் படை அலுவலக்தை தொடர்புகொள்ளலாம்.

இப்பணிக்கு சேர விருப்பமுள்ளவர்கள் வரும் 28.08.2025 முதல் 25.09.2025 வரை மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் (ரேணுகா சில்க்ஸ் எதிரில்) காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை விண்ணப்ப படிவங்களை பெற்றுக்கொள்ளலாம். இப்பணியில் சேர பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் உடல் ஆரோக்கியத்துடனும் தேர்வு நடைபெறும் நாளில் 20 வயது நிரம்பியவர்களாகவும் 45 வயது நிறைவடையாதவராகவும் இருக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பங்கள் பெற வரும்போது கல்வி சான்றிதழ், ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், அசல் மற்றும் இவற்றின் நகல்கள் மற்றும் அண்மையில் எடுத்த பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம் 2 எடுத்துவர வேண்டும்.மேலும் இந்திய குடிமகனாகவும், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும்.

உடற்தகுதி (உயரம்: ஆண்கள் 167 செ.மீ, மார்பு அளவு: ஆண்கள் சாதாரண நிலையில் 81 செ.மீ விரிந்த நிலையில் 86 செ.மீ. உயரம்: பெண்கள் 157 செ.மீ இருத்தல் வேண்டும்). முக்கிய குறிப்பாக எவ்வித அரசியல் கட்சியில் தொடர்பு இல்லாதவராகவும் குற்ற பின்னனி இல்லாதவராகவும் இருக்க வேண்டும். இப்பணிக்கு மாத ஊதியம் எதுவும் வழங்கப்படமாட்டாது. பணி நாட்களுக்குரிய ஊக்கத்தொகை மட்டுமே வழங்கப்படும்.

தேர்வு நாள் அன்று எவ்வித பயணப்படியும் வழங்கப்படமாட்டாது. மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு 45 நாட்கள் அடிப்படை கவாத்து பயிற்சி வழங்கப்படும். விண்ணப்பங்கள் பெறப்பட்டவுடன் உடற்தகுதி தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்டும் என்றும், 9894476223, 7092534474 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!