Perambalur: 2 people, including a vagrant, arrested for murdering a woman and committing suicide; autopsy reveals what happened!!

பெரம்பலூர் அருகே உள்ள ஆலம்பாடி கிராமத்தில் பெற்ற தாயை கொலை செய்து விட்டு தூக்கில் தொங்க விட்டு நாடகமாடிய மகன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த தந்தையும் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பெரம்பலூர் அருகே உள்ள ஆலம்பாடி கிராமத்தில் நேற்று முன்தினம் பரமஜோதி (73) என்பவர் தனது மனைவி கலைச்செல்வி (65) என்பவர் வயது முதிர்வு காரணமாகவும், அடிக்கடி முதுகு தண்டுவடம் சரியில்லாத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாகவும் அதன் காரணமாக வயலில் உள்ள சப்போட்டா மரத்தில் தூக்கு மாட்டி கொண்டு இறந்துவிட்டதாகவும், மனைவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் பெரம்பலூர் ரூரல் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலலீசார் விசாரணை நடத்தி வந்தனர். பிரேத பரிசோதனை அறிக்கைக்கும், புகாருக்கு தொடர்பு இல்லாமல் இருந்துள்ளது.

பெரம்பலூர் ரூரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திரா பல்வேறு கோணத்தில் இந்த வழக்கு குறித்து விசாரணை நடந்தி வந்ததார். அப்போது இறந்து போன கலைச்செல்வியின் மகன் சிவசங்கர் (28) சென்னையில் வேலை செய்து வருவதாகவும், தற்பொழுது அவர் விடுப்பில் வீட்டிற்கு வந்துள்ளார். தனது தாய் கலைச்செல்வியிடம் தொழில் செய்ய அடிக்கடி பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். கடந்த 19.07.2025ம் தேதி அன்று தனது தாய் வயலுக்கு சென்ற போது பின்தொடர்ந்து பணம் கேட்ட நிலையில், பணம் தர மறுத்தால் தனது தாயை கொலை செய்து போதையில் பலமாக தாக்கி உள்ளார். இதில் கலைச்செல்வி தாக்குதலில் நிலைக்குலைந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலையை மறைத்து தனது மகனை காப்பற்ற தந்தையான பரமஜோதி என்பவர் தனது மனைவி தூக்குமாட்டி இறந்தாக பொய் புகார் கொடுத்ததும், கொலைக்கு உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது. பின்னர், இருவரையும் கைது செய்த போலீசார், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறைக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

பெற்ற தாயையே மகன் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!