Perambalur 32-thousand Lights New Year’s Eve at the Akal lamp festival in arumpavur! பெரம்பலூர் அருகே உள்ள அரும்பாவூரில் புத்தாண்டை முன்னிட்டு 32 ஆயிரம் விளக்குள் கொண்ட அகல் தீப திருவிழா நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூரில் (பேரூராட்சி) உள்ள காமாட்சியம்மன் உடனுறை வடகையிலாய நாயனார் கோவிலில் இன்று பொதுமக்கள் புத்தாண்டை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் மாலை 6 மணிக்கு அகல் விளக்குகளை கொண்டு தமிழ், தெலுங்கு, மராத்தி, ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிபேசும் மக்கள் ஒன்று சேர்ந்து உலக நன்மை வேண்டியும், மழை பொழிந்து விவசாயம் செழிக்க வேண்டியும், அரிசிக்கு புகழ் பெற்ற அரும்பாவூரில் 32 ஆயிரத்து 9 விளக்குகளை கொண்டு இன்று அகல் தீப திருவிழா நடந்தது.

இதில் பூலாம்பாடி, பெரியம்மாபாளையம், உடும்பியம், வெங்கனூர், வெங்கலம், தழுதாழை, தொண்டைமாந்துறை, விஜயபுரம், கோரையாறு, மேட்டூர், கொட்டார குன்று, மலையாளப்பட்டி உள்ளிட்ட 20 மேற்பட்ட கிராம பொதுமக்கள் ஒன்று திரண்டு வழிபட்டனர். இதில் இந்து, முஸ்லீம், கிறித்துவ மதத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!