Perambalur: 40 years in prison for a youth in a POCSO case; one lakh fine: Court verdict!
போக்சோ வழக்கின் குற்றவாளிக்கு 40 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூபாய்.1 லட்சம் அபராதம் விதித்து பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பு விதித்தது.
பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிறுமியை பாலியல் தொந்தரவு, கற்பழிப்பு செய்ததாக பழனியாண்டி மகன் சுரேஷ்குமார் (33) மீது பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு Cr.No : 24/2019 U/s 5(l), 5 (j) (ii), 6 of POCSO Act போக்சோ வழக்கு பதிவு செய்ததுடன் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு போலீசார் அனுப்பிவைத்தனர்.
பின்னர், இவ்வழக்கின் விசாரணை முடித்து குற்ற இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இன்று நீதிமன்ற விசாரணையில் வழக்கின் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் சுரேஷ்குமார் குற்றவாளி என உறுதி செய்த நீதிமன்றம், சுரேஷ்குமாருக்கு 5(l) of POCSO Act பிரிவின் கீழ் 20 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் 50,000 ரூபாய் அபராதமும் 5 (j) (ii) of POCSO Act – பிரிவின் கீழ் 20 வருடம் சிறை தண்டனை மற்றும் 50,000 ரூபாய் அபராதமும், என மொத்தம் 40 வருடம் கடுங்காவல் சிறை தண்டனையும் 1,00,000 ரூபாய் அபராதம் எனவும் மேற்படி தண்டனை காலத்தை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும். மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி இந்திராணி உத்தரவிட்டார்.